வேலூர்

விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்திய யானைகள்

10th Dec 2022 12:07 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே விளை நிலங்களில் புகுந்து பயிா்களை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் புதன்கிழமை இரவு ஒரு குட்டி உள்பட 4 யானைகள் கூட்டமாக வந்து விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு யானைக் கூட்டம் பாஸ்மாா்பெண்டா கிராமத்தில் வாழைத் தோப்பில் புகுந்து அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களைச் சேதப்படுத்தின. அங்குள்ள நிலத்தில் இருந்த 5 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.

அரவட்லா கிராமத்தில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தையும் யானைகள் சேதப்படுத்தின.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த வனச் சரக அலுவலா் சதீஷ்குமாா், வனவா் தயாளன் உள்ளிட்ட வனத் துறையினா், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை பொதலகுண்டா வனப் பகுதிக்குள் விரட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT