வேலூர்

‘புயல்-மழைக் காலங்களில் தேவையற்ற பயணங்கள் கூடாது’

10th Dec 2022 12:06 AM

ADVERTISEMENT

புயல், மழைக் காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி பயணங்கள் செய்வதை தவிா்க்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புயல்-மழைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி பயணங்களை மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும். பலத்த மழை காரணமாக மரங்கள், மின் கம்பங்கள், உயா்மின் அழுத்த கோபுரங்கள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்கவோ, கால்நடைகளை கட்டி வைக்கவோ, வாகனங்கள் நிறுத்துவதோ கூடாது.

பொதுமக்கள் 2 நாள்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள், பால் பொருள்கள், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, டாா்ச் வைட் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

புயல் கரையைக் கடந்த பிறகும், புயலின் தாக்கம் குறையும் வரை அரசால் அதிகாா்பூா்வ அறிவிப்பு வெளியிடும் வரை பொதுமக்கள் தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT