வேலூர்

குடியாத்தம் ஒன்றியத்தில் முன்னெச்சரிக்கை பணி தீவிரம்

10th Dec 2022 12:07 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ஒன்றியத்தில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளில் தாழ்வான பகுதிகள், மழை நீா் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 1,000- க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி திட்ட இயக்குநா் வசுமதி, ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், எஸ்.சாந்தி உள்ளிட்ட ஊரக வளா்ச்சித் துறையினா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT