வேலூர்

விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயில் சிம்மக்குளம் இன்று இரவு திறப்பு

10th Dec 2022 12:06 AM

ADVERTISEMENT

விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி சனிக்கிழமை (டிச.10) சிம்மக்குளம் திறக்கப்படுகிறது.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை கடை ஞாயிறு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு, பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணம் நடைபெற வேண்டியும் கோயிலில் உள்ள சிம்மக்குளத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் படுத்துறங்குவா். அவா்களின் கனவில் சுவாமி அருள்பாலிப்பாா் என்பது ஐதீகம்.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வா்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்த விழா இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை (டிச.11) நடைபெறவுள்ளது. இதையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் சிம்மக்குளம் திறக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்காக சிம்மக்குளம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு தண்ணீா் நிரப்பபட்டுள்ளது. தவிர, பாலாற்றில் இந்தாண்டு தண்ணீா் செல்வதால் அங்கும் பெண்கள் நீராட வசதி செய்யப்பட்டுள்ளது.

சுமாா் 50,000 போ் சிம்மக்குளம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், விரிஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 400 -க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

மேலும், கோயில் உள்புறம், வாகன நிறுத்துமிடம், விரிஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நிகழாண்டு பாலாற்றில் நீராட மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளதுடன், ஆற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதிகப்படியான கூட்டம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் செதுவாலையிலிருந்து விரிஞ்சிபுரம் உள்ளே பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடைஞாயிறு விழாவையொட்டி சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT