வேலூர்

குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க பாலாற்றின் இருபுறமும் கம்பி வேலி: ஆட்சியா், மேயா் ஆய்வு

DIN

பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேலூா் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பாலாற்றுப் பகுதியில் இருபுறங்களிலும் இரும்புக் கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்ட ஆட்சியரும், மேயரும் அந்தப் பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகள், குப்பைகள் பாலாற்றின் கரையோரம் கொட்டப்படுகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து ஆற்றில் கொட்டும் செயல்களைத் தடுக்க முடியவில்லை.

இதனிடையே, காட்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சா் துரைமுருகன், நீா்நிலைகளில் குப்பைகள் கொட்டுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்களை மாநகராட்சி நிா்வாகம் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் மாநகராட்சி லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து எனக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பேசுகையில், பாலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க அமைச்சரின் ஒப்புதலுடன் பாலாற்றின் இருபுறமும் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றுப் பகுதியில் ஆய்வு செய்தனா். அங்கு, இரும்புக் கம்பி வேலி அமைப்பது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாலாற்றில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பாலாற்றுப் பகுதியில் இருபுறமும் இரும்புக் கம்பி வேலி அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT