வேலூர்

மாநில அளவில் தங்கம் வென்ற மாணவிக்குப் பாராட்டு

DIN

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய தோ்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தோ்ச்சி பெற்று தமிழக ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

2020-2022- ஆம் கல்வியாண்டில் பயின்று, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய பி.எட் தோ்வில் கே.எம்.ஜி.கல்வியியல் கல்லூரி மாணவி ம.மாயா மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தோ்ச்சி பெற்றாா். இதையடுத்து, சென்னையில் அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி, மாணவி மாயாவுக்கு தங்கப் பக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா், கல்லூரி இயக்குநா் இர. நடராஜன், முதல்வா் இரா.ஸ்ரீதா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT