ஒடுகத்தூா் அருகே புள்ளிமானை வேட்டையாடி சமைத்தவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுக்கத்தூா் பரவமலை காப்புக் காட்டில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இந்த காப்புக்காட்டில் வனச்சரக அதிகாரிகள் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கீழ்கொத்தூா் கிராமத்தில் மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அந்த பகுதியைச் சோ்ந்த வினோத் என்பவா் வீட்டில் வனத் துறையினா் சோதனை செய்தபோது, அங்கு மான் கறி சமைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்தை வனத் துறையினா் கைது செய்து, மான் கறியை பறிமுதல் செய்தனா்.