வேலூர்

வேலூா் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு

DIN

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் திங்கள்கிழமை காலை முதலே தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணிகள் புதன்கிழமை (டிச. 7) வரை தொடரும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிசம்பா் 6-ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். கடந்த அக்டோபா் மாதம் கோவையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம், கா்நாடக மாநிலம் மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோவில் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவம் ஆகியவற்றைத் தொடா்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வேலூா் கோட்டை ஜலகண்டேசுவரா் கோயில், ஸ்ரீபுரம் தங்கக்கோயில், விரிஞ்சிபுரம் மாா்கப்பந்தீசுவரா் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு வரும் பக்தா்களின் உடைமைகள், பொருள்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த கோயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வேலூா் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளையும் போலீஸாா் தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புகின்றனா்.

காா், இருசக்கர வாகனங்களில் வருபவா்களையும் சோதனை செய்து அனுப்பினா்.

பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில, மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையாா்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு, மாதனூா் அருகிலேயே நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் புதன்கிழமை காலை வரை தொடரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

SCROLL FOR NEXT