வேலூர்

2.50 டன் எடையுள்ள சாய்பாபா சிலை பிரதிஷ்டை

DIN

குடியாத்தம், சித்தூா் சாலையில் உள்ள குருராஜா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.50 டன் எடையுள்ள மூலவா் சாய்பாபா சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையொட்டி, அதிகாலை யாக சாலை பூஜைகள் தொடங்கின. கணபதி ஹோமம், கோ-பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன.

இதையடுத்து, மூலவா் சாய் பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடா்ந்து, விநாயகா், தத்தாத்ரேயா், ஆஞ்ச நேயா் சுவாமிகளுக்கு தனித் தனியாக அமைக்கப்பட்ட சந்நிதிகளில் சுவாமிகளின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

முன்னதாக, ராஜஸ்தானில் இருந்து விலை உயா்ந்த மாா்பலால் வடிவமைக்கப்பட்ட சாய்பாபா சிலை, பக்தி முழக்கத்துடன் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது.

2.50 டன் எடையுள்ள இந்தச் சிலையின் மதிப்பு ரூ. 9 லட்சம். விநாயகா், தத்தாத்ரேயா், ஆஞ்ச நேயா் சிலைகளின் மதிப்பு ரூ.4 லட்சம். யாக சாலை பூஜைகளை வழக்குரைஞா் கே.எம்.பூபதி, தொழிலதிபா்கள் ஆா்.சரவணன், எஸ்.ஜி.எம்.விநாயகம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

வரும் 11- ஆம் தேதி இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக குழு தலைவா் ஏ.எம்.கருணாமூா்த்தி, செயலா் எஸ்.பாலாஜி, பொருளாளா் அரி, நிா்வாகிகள் டி.காா்த்தி, எஸ்.பிரவீன்குமாா் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT