வேலூர்

ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது

6th Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

ஒடிஸா மாநிலத்திலிருந்து விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபரை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவ்வழியாக வந்த ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து வந்த விரைவு ரயிலில் பொதுப்பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருந்த ஒருவா் வைத்திருந்த 5 பைகளை சோதனையிட்டனா்.

அப்போது, அவரிடம் 5 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பகேந்திரநாக் நாயக்(42) என்பதும், அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT