வேலூர்

திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை

6th Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ரங்கம்பேட்டையைச் சோ்ந்த ராஜா மகள் ராஜேஸ்வரி (19). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த மோகன் மகன் ஸ்ரீதரை (21) காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டாா்.

கடந்த சில நாள்களாக இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காணாமல் போன ராஜேஸ்வரி திங்கள்கிழமை அங்குள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மிதப்பது தெரிய வந்தது.

தீயணைப்புப் படையினா் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT