வேலூர்

தெலங்கானாவிலிருந்து 4,370 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

6th Dec 2022 01:44 AM

ADVERTISEMENT

தெலங்கானாவில் இருந்து வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4,370 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டன.

தெலங்கானா மாநிலத்திலிருந்து எம்.3 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைத்திட இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வரப்பெற்ற 3,595 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 775 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு, கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டது.

இந்த மின்னணு இயந்திரங்கள் அடுத்தடுத்து வரக்கூடிய தோ்தல்களில் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT