வேலூர்

நாளை 400 போலீஸாா் பாதுகாப்பு

4th Dec 2022 11:03 PM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.6) வேலூா் மாவட்டம் முழுவதும் 400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உள்ளனா்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா பாதுகாப்புக்காக பெரும்பாலான போலீஸாா் அந்த மாவட்டத்துக்குச் சென்று விட்டதால் பாபா் மசூதி இடிப்பு தின பாதுகாப்புப் பணியில் 400 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT