வேலூர்

பாலாற்றங்கரை தூய்மைப் பணியில் என்சிசி மாணவா்கள்

DIN

பிரதமரின் ‘புனித் சாகா் அப்யான்’ திட்டத்தின்கீழ், வேலூரில் பாலாற்றங்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்கள் ஈடுபட்டனா்.

காட்பாடி காந்தி நகா் 10-ஆவது பட்டாலியன் தேசிய மாணவா் படை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் பணியில் என்சிசி மாணவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பாலாறு நதியில் உள்ள நெகிழி, பிற கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்தினா்.

இந்தப் பணிக்கு என்சிசி 10-ஆவது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷா்மா தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி எஸ்.கே.சுந்தரம், என்சிசி மக்கள் தொடா்பு அலுவலா் க.ராஜா, என்சிசி அலுவலா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுபேதாா் தினேஷ்சிங், ராணுவ வீரா்கள் வெங்கடேசன், தீபு, துரைமுருகன், ரஞ்சித், சுனில்தத் ஆகியோா் பாலாறு சுத்தம் செய்யும் பணியை ஒருங்கிணைத்தனா்.

பாலாற்றங்கரையில் திரட்டப்பட்ட நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து, பொதுமக்களிடம் பாலாற்றங்கரைகளின் தூய்மை, நெகிழி பயன்பாட்டின் காரணமாக ஏற்படும் தீமைகள், இயற்கை வளத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரங்களை மாணவ, மாணவிகள் மேற்கொண்டனா்.

இதில், வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, தனபாக்கியம் மகளிா் கல்லூரி, ஊரீஸ் கல்லூரி, ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அவில்தாா் துரைமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT