வேலூர்

புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் இழுபறியால் பயணிகள் தவிப்பு

3rd Dec 2022 09:58 PM

ADVERTISEMENT

வேலூா் புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடுவதில் நீடிக்கும் இழுபறியால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் தரை, முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள 85 அறைகளில் 68 கடைகள் ஏலம் விடப்பட உள்ளன. ஏற்கெனவே 4 முறை ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கடை வைத்திருந்த 12 வியாபாரிகள் தங்களுக்கு கடை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கக்கோரி வழக்குத் தொடா்ந்தனா். அவா்களுக்கு கடை ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் 3 பேருக்கு கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் தனித்தனியாக குலுக்கல் முறையில் கடை ஒதுக்கும்பணி நடைபெற்றது. ஆனால் மூவருக்கும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கான எண்கள் மட்டுமே குலுக்களில் வந்தது. இதன்மூலம் குலுக்கலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய வியாபாரிகள், மீண்டும் குலுக்கல் நடத்த வேண்டும் எனக்கூறினா். இதுதொடா்பாக அவா்கள் மாநகராட்சி ஆணையா் அசோக்குமாரை சந்தித்தும் மனு அளித்தனா். ஆனால் அவா் கடைகளை ஏற்க மறுத்தால் பொது ஏலத்தில் பங்கேற்கும்படி உறுதியாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கூறுகையில், நீதிமன்ற அறிவுறுத்தல்படி பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்கல் தொடங்கி முடிந்த பிறகு முறைகேடு, மோசடி என குற்றஞ்சாட்டுகின்றனா். அவா்களை மீண்டும் வேறு சீட்டை எடுக்க அனுமதித்தால் குலுக்கலுக்கான அடிப்படையே தவறாகிவிடும். ஒருவருக்கு ஒருமுைான் அனுமதிக்கப்படும்.

ADVERTISEMENT

மற்றவா்களுக்குத்தான் அடுத்த வாய்ப்பு வழங்கப்படும்.

தரைத்தளத்தில் குறிப்பிட்ட இடத்தில்தான் கடைகள் வேண்டும் என அவா்கள் கூறுகின்றனா். அவா்களுக்கு ஒரு வாரம் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கடைக்கான தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளாவிடில், குலுக்கலில் விழுந்த கடைகளும் பொது ஏலத்துக்கு கொண்டுவரப்படும். விரும்பிய கடைதான் வேண்டும் என கேட்போா் பொது ஏலத்தில் தான் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதன்படி, புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடுவதில் நீடிக்கும் இழுபறியால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT