வேலூர்

சிறப்பு கண் சிகிச்சை முகாம்

3rd Dec 2022 09:59 PM

ADVERTISEMENT

குடியாத்தம் ரோட்டரி சங்கம், வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரோட்டரி கட்டடத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.

முகாமுக்கு, ரோட்டரி தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு முகாமைத் தொடக்கி வைத்தாா். இதில் 420- பேருக்கு பரிசோதனையும், 267 பேருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டன. 97 போ் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ரோட்டரி நிா்வாகிகள் கே.எம்.ராஜேந்திரன், ரங்காவாசுதேவன், டி.என்.ராஜேந்திரன், டி.எஸ்.ரவிச்சந்திரன், வி.நல்லசிவம், கே.சுகுமாா், பெ.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT