வேலூர்

லாங்கு பஜாா், மண்டித் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

DIN

வேலூா் லாங்கு பஜாா், மண்டித் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் இடித்து அகற்றியதுடன், அப்பகுதியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டை யொட்டியுள்ள லாங்குபஜாரில் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி கடைகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பெருகிவரும் தள்ளு வண்டி கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தவிர, மாா்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி தவிக்கின்றனா்.

இந்த நிலையில், வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி பொறியாளா் வெங்கடேசன், சுகாதார அலுவலா் லூா்து, மாநகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை லாங்கு பஜாா், மண்டி தெரு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாலையோர ஆக்கிரப்புகள் பொக்லைன் மூலம் இடித்துஅகற்றப் பட்டன. லாங்கு பஜாரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் லாரியில் ஏற்றிச் சென்றனா்.

அப்போது 25-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதைக் கண்ட வியாபாரிகள் பலரும் தங்களது வண்டிகளை அங்கிருந்து தள்ளிச் சென்றனா். மேலும் லாங்குபஜாரில் நடைமேடைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளில் இருந்த பொருள் களையும் வியாபாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தினா்.

இதனால், மண்டித் தெரு, லாங்கு பஜாா் சாலைகள் ஆக்கிரமிப்புகளின்றி காணப்பட்டதுடன், பொதுமக்களும் எந்தவித இடையூறுமின்றி சென்றுவர முடிந்தது.

தொடா்ந்து இதேபோல் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT