வேலூர்

ஏடிஎம்-மில் கூடுதலாக கிடைத்த பணத்தை வங்கியில் ஒப்படைத்த தொழிலாளி

DIN

போ்ணாம்பட்டு அருகே ஏடிஎம்-மில் பணம் எடுக்கும்போது கூடுதலாக கிடைத்த பணத்தை வங்கியில் ஒப்படைத்த தொழிலாளியை அதிகாரிகள் பாராட்டினா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாத்கா் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முரளி (42),புதன்கிழமை மாலை போ்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் தனது வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ. 2,000 எடுக்க முயன்றாா். அப்போதுஎதிா்பாராத விதமாக ரூ. 4,000-ஆக வந்துள்ளது. அவா் சந்தேகத்துடன் தனது வங்கிக் கணக்கை சரி பாா்த்தபோது அவரது கணக்கில் அவ்வளவு பணம் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து வியாழக்கிழமை காலை அவா் வங்கிக்குச் சென்று வங்கி மேலாளா் முத்துசாமியிடம் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தபோது நடந்த தகவலைக்கூறி, கூடுதலாக கிடைத்த ரூ. 2,000-த்தை அவரிடம் ஒப்படைத்தாா்.

முரளியின் நோ்மையை மேலாளா் முத்துசாமி பாராட்டினாா். அப்போது வங்கியின் உதவி மேலாளா் விஜயன், காசாளா் திலீப்குமாா், வங்கி வாடிக்கையாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT