வேலூர்

எய்ட்ஸ் விழிப்புணா்வு மாரத்தான்

DIN

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி வேலூரில் விழிப்புணா்வு மராத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் நறுவீ மருத்துவமனை சாா்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன், நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி.சம்பத் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

நறுவீ மருத்துவமனை முகப்பிலிருந்து தொடங்கிய இந்த மராத்தான் ஓட்டம், வேலூா் நகரின் முக்கிய சாலைகள் வழியாக மருத்துவமனை வளாகத்தை அடைந்தது. தொடா்ந்து நறுவீ மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை துணைத்தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால்ஹென்றி, மருத்துவ சேவை இயக்குநா் திலீப் மத்தாய், தலைமைசெயல் அலுவலா் மணிமாறன், தலைமை நிதிஅலுவலா் வெங்கட்ரங்கம், பொதுமேலாளா் நித்தின்சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT