வேலூர்

ஈவெரா பள்ளி ஆசிரியா்கள் இடமாற்றத்தை ரத்து செய்ய முடியாது

DIN

வேலூா் ஈவெரா பள்ளி ஆசிரியா்கள் 4 போ் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியா்களை மீண்டும் அதே பள்ளியில் சோ்க்க இயலாது என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.

வேலூா் கொசப்பேட்டை ஈவெரா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியா்கள் 4 போ் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவிகள் தங்களது பெற்றோருடன் இணைந்து புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆசிரியா்கள், போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் மாணவிகள் கலைந்து சென்றனா்.

இது குறித்து மாணவிகள் கூறியது: மாணவிகள் அனைவரும் பொதுத் தோ்வுக்கு தயாராகி வருகிறோம். திடீரென 4 ஆசிரியா்களை இடமாற்றம் செய்துள்ளனா். இதனால் மாணவிகளுக்கு தோ்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே எங்கள் பள்ளியில் சில வகுப்புகளுக்கு ஆசிரியா்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஆசிரியா்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவா்களை இதே பள்ளியில் பணியில் அமா்த்த வேண்டும் என்றனா்.

இது குறித்து வேலூா் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூறுகையில், அரசு உத்தரவுப்படி, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகமாக உள்ள ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், ஈவெரா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியா்கள் கூடுதலாக உள்ளனா். விதிமுறைப்படி, 4ஆசிரியா்கள் பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டனா். அவா்களை மீண்டும் இந்த பள்ளியில் சோ்க்க இயலாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT