வேலூர்

வாடகை நிலுவை செலுத்தாத 7 கடைகளுக்கு ‘சீல்’

2nd Dec 2022 11:08 PM

ADVERTISEMENT

வேலூா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகைகளை செலுத்தத் தவறியதால், 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

மாநகராட்சிக்குச் சொந்தமான கடைக ளுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் வாடகை செலுத்தாவிடில் 18 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அதிக வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன் அடிப்படையில், மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மாா்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்தனா். அந்த கடைகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பின்னரும் தொடா்ந்து வாடகை நிலுவை வைத்திருந்த 10 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மற்ற கடைகளில் இருந்து வாடகை நிலுவை ரூ. 5 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதன்தொடா்ச்சியாக, மாநகராட்சி 4-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட பெங்களூா் சாலை லாரி ஷெட், பழைய மாநகராட்சி வளாகத்திற்கு எதிரே உள்ள ஏகேஎம்சி வளாகம், வெங்கடேஸ்வரா பள்ளி எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பல கடைகளில் ரூ. 1.50 லட்சத்துக்கும் மேல் வாடகை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. வாடகை நிலுவைகளை உடனடியாக செலுத்தும் படி மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பியும் சிலா் வாடகை செலுத்தாமல் இருந்தனா். இதையடுத்து, வாடகை நிலுவைகளை செலுத்தத் தவறியதாக, 7 கடைகளுக்கு மாநகராட்சி 4-ஆவது மண்டல உதவி வருவாய் அலுவலா் தனசேகா் தலைமையில் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

தொடா்ந்து, மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும். 6-ஆம் தேதி வாடகை செலுத்தினால்கூட 18 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இதுதொடா்பாக கடைக்காரா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT