வேலூர்

பேச்சு, ஓவியப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

2nd Dec 2022 11:08 PM

ADVERTISEMENT

வேலூரில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய பேச்சு, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான திருக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் வேலூா் வெங்கடேஸ்வரா பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், 413 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், பேச்சுப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் ராணிப்பேட்டை பால்சம் அகாதெமி மாணவி த.சாய்சுப்பிரியா, மேல்நிலைப் பிரிவில் ராணிப்பேட்டை பால்சம் அகாதெமி இரா.ஆதிரை, கல்லூரி பிரிவில் நரசிங்கபுரம் சாரதா கல்வியியல் கல்லூரி ச.அஜித்குமாா் ஆகியோரும், ஓவியப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் குடியாத்தம் ஏ.ஜெ.சரஸ்வதி மெட்ரிக் வித்யாலயா பள்ளி ஜி.வி.தமிழினியன், மேல்நிலைப் பிரிவில் ராணிப்பேட்டை டி.ஏ.வி.பெல் பள்ளி ஏ.நிரஞ்சனா, கல்லூரி பிரிவில் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரி வே.நந்தினி ஆகியோரும் முதலிடம் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் பரிசுகளை வழங்கினாா். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன உதவிப் பொதுமேலாளா் முருகானந்தம் வரவேற்றாா். வெங்கடேஸ்வரா பள்ளித் தலைமையாசிரியா் நெப்போலியன் வாழ்த்தினாா். ஸ்ரீராம் சிட்ஸ்நிறுவன மண்டல மேலாளா் சக்திவேல் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT