வேலூர்

தாய்சேய் நலக் கல்வி விழிப்புணா்வு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், கா்ப்பிணிகளுக்கான தாய் சேய் நலக்கல்வி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கிராம சுகாதார செவிலியா் தீபா தலைமை வகித்தாா். கா்ப்ப கால பராமரிப்பு, தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணா்வு, அவற்றின் அவசியம், குழந்தைகள் பராமரிப்பு, அரசு உதவிகள் குறித்த விவரம், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்தான உணவு குறித்த விவரம், தன் சுத்தம் போன்றவை குறித்து பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி, கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு விளக்கம் அளித்தாா். அங்கன்வாடி பணியாளா்கள் ஷா்மிளா, ஜெயந்தி, பொயட்ஸ் பணியாளா்கள் உஷா, சாந்தலட்சுமிஉள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாலியல் விழிப்புணா்வு கருத்தரங்கம்

அதேபோல், செம்பேடு ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுதல், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், பெண்களுக்கான சட்ட பாதுகாப்புகள், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி பேசினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT