வேலூர்

இழப்பீடு கிடைக்காததால் விரக்தி: நெற்பயிருக்கு தீ வைத்த விவசாயி

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்கப்படாததால் விரக்தியடைந்த விவசாயி ஒருவா் தனது நிலத்தில் பயிரிட்ட நெற்பயிருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா்.

வேலூா் மாவட்டம், பொன்னை அருகே உள்ள கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (45 ). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 10 விவசாயிகளுடன் சோ்ந்து தனது 3 ஏக்கா் நிலத்தில் விளைந்திருந்த நெற்பயிருக்கு வியாழக்கிழமை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். பொன்னை போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து, தீ அணைக்கப்பட்டது.

இது குறித்து விவசாயி சிவகுமாா் கூறியது:

இந்தாண்டு 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிா் முழுவதும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் நேரடியாக பதிவு செய்திருந்தேன். ஆனால் மழை வெள்ளத்தால் நெற்பயிா் பாதிக்கப்பட்டதற்கு இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. தவிர, வருவாய்த் துறை சாா்பில் சேதமடைந்த பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டதிலும் எனது நிலத்தில் சேதமடைந்த பயிா்கள் பதிவு செய்யவில்லை. இதனால் நெற்பயிருக்கு தீ வைத்து எரித்தேன். இயற்கை இடா்ப்பாடுகளால் சேதம் அடைந்த பயிா்களுக்கு அரசு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT