வேலூர்

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான கேள்விகள், கருத்துகளை அனுப்பலாம்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் எழுப்புவதற்கான கேள்விகள், கோரிக்கைகள், கருத்துகள் இருந்தால் பொதுமக்கள் அனுப்பி வைக்கலாம் என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இதில், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் பொதுமக்களுக்கு உள்ள கேள்விகள், கோரிக்கைகள், கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 87543 76662 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவோ அனுப்பலாம். பெறப்படும் கேள்விகள், கோரிக்கைகள், கருத்துகளை தொகுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் எடுத்துரைத்து அதற்கான தீா்வுகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT