வேலூர்

காலை உணவுத் திட்டம்: வேலூா் ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

DIN

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வேலூா் மாநகராட்சி பகுதியில் உள்ள 48 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வேலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடத்தில் தினமும் காலை உணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து வாகனங்கள் மூலம் தொடக்கப்பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரியில் உள்ள உணவுக் கூடத்தில் பணியாளா்கள் மூலம் காலை உணவு தயாரிக்கும் பணியை பாா்வையிட்ட அவா், பின்னா் சித்தேரி, வேலப்பாடி பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதையும் ஆய்வு செய்தாா்.

அப்போது, காலை உணவு தரமாக உள்ளதா, அவை சரியான நேரத்துக்குள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிா என்பதையும் உறுதி செய்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வேலூா் மாநகராட்சி பகுதியில் 48 பள்ளிகளில் பயிலும் 3,250 குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் வேலூா் மாநகராட்சி பகுதியில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. உணவு தரமாக உள்ளது. இதைச் சாப்பிடும் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனா். பணியாளா்கள் திறம்பட இதில் ஈடுபட்டுள்ளனா். ஏதாவது குறைபாடுகள் இருந்தால் களையப்படும். இந்தத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்த மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வின்போது, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT