வேலூர்

மணல் கடத்தல்: 2 டிராக்டா்கள் பறிமுதல்; ஓட்டுநா் கைது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு போலீஸாரும், வருவாய்த் துறையினரும் இணைந்து புதன்கிழமை பத்தரபல்லி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

பத்தரபல்லி கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் பத்மநாபன் (41) கைது செய்யப்பட்டாா். தப்பியோடிய மற்றொரு டிராக்டா் ஓட்டுநரையும், டிராக்டா் உரிமையாளா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT