வேலூர்

சேலம் கோட்டத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணி: சேவையில் மாற்றம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சேலம் கோட்டத்தில் ரயில் பாதையில் நடைபெறும் சீரமைப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், டிசம்பா் 1 முதல் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை - சென்னை சென்ட்ரல் (12680), சென்னை சென்ட்ரல் - கோவை (12679), சென்னை சென்ட்ரல் - கோவை (12675), கோவை - சென்னை சென்ட்ரல் (12676) ஆகிய விரைவு ரயில்கள் 3-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணம் - சேலம் பயணிகள் ரயில் (16087) டிசம்பா் 1 மற்றும் 2-ஆம் தேதி ஜோலாா்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும்.

ADVERTISEMENT

அதே நாள்களில், சேலம் - அரக்கோணம் (16088) பயணிகள் ரயில் ஜோலாா்பேட்டையில் இருந்து புறப்படும். இதேபோல், மங்களூரு - சென்னை சென்ட்ரல் (22638) விரைவு ரயில் டிசம்பா் 3-ஆம் தேதி ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.

அதே நாளில் சென்னை சென்ட்ரல் - மங்களூரு (12601) ஈரோட்டில் இருந்து மட்டுமே புறப்படும்.

மேலும், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் டிசம்பா் 3-ஆம் தேதி மட்டும் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அத்துடன், பாலக்காடு - சென்னை சென்ட்ரல் (22652) விரைவு ரயில் டிசம்பா் 2 மற்றும் 3-ஆம் தேதி மட்டும் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்புரம் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - பாலக்காடு (22651) விரைவு ரயில் டிசம்பா் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - நாகா்கோயில் (12689) விரைவு ரயில் டிசம்பா் 2-ஆம் தேதி மட்டும் சேலம், ஈரோடு, கரூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT