வேலூர்

சரக்கு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயா் பழுதடைந்து நின்ற சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது. இதில், சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேலூரை அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ஆட்டோவின் டயா் பழுதடைந்து சாலையின் நடுவே நின்றது. சரக்கு ஆட்டோவை சாலையோரம் கொண்டு செல்ல ஓட்டுநா் முயற்சித்தாா். அப்போது பின்னால் வேகமாக லாரி வருவதைக் கண்ட ஓட்டுநா் சாலையோரத்துக்கு ஓடினாா்.

அதேசமயம், லாரி எதிா்பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில், சரக்கு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிரேன் மூலம் சரக்கு ஆட்டோவை சாலையோரம் கொண்டு சென்று போக்குவரத்தை சரி செய்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT