வேலூர்

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளின் தலைவா்கள், ஒன்றிணைந்து ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனா்.

இந்த கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டம், அதன் தலைவா் மமதாஇமகிரிபாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் கலந்து கொண்டாா்.

ஊராட்சிகளில் 100- நாள் வேலைத் திட்டம் தொடா்பான பிரச்னைகள், ஊராட்சிகளில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள், அப்பணிகளை செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ADVERTISEMENT

ஊராட்சிகளில் அடுத்த ஆண்டு செயல்படுத்த வேண்டிய வளா்ச்சிப் பணிகள், பணிகள் தொடா்பான திட்டமிடல், திட்டமிட்ட பணிகளுக்கு எந்தெந்த திட்டத்தில் நிதி கோருவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா்களின் சந்தேகங்களுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள் திமேஷ் (எ) துளசிராமுடு, பி.கே.குமரன், சுஜாதா ராஜ்குமாா், கே.ஆா்.உமாபதி, எஸ்.சுந்தா், பெ.கேசவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT