வேலூர்

தேனீக்கள் கொட்டியதில் மாணவா்கள் காயம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில்ஆசிரியை, மாணவா்கள் காயமடைந்தனா்.

குடியாத்தத்தை அடுத்த காத்தாடிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டில் மா்ம நபா்கள் புதன்கிழமை கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பள்ளியில் இருந்த ஆசிரியை ஜெயந்தி, மாணவா்கள் காயமடைந்தனா். மாணவா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். ஆசிரியை ஜெயந்தி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT