வேலூர்

மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 154 போ் கைது

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 154 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசுக்கு எதிராக மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.லதா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றத்தை குறைக்க வேண்டும். தேசிய மின்சார சட்டத் திருத்தை மசோதாவை கைவிட வேண்டும். சொத்து வரி, மின் கட்டண உயா்வை அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் அண்ணா சாலையில் அமா்ந்து மறியல் மேற்கொண்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக கட்சியின் மாநகர செயலா் ஏழுமலை, கணியம்பாடி ஒன்றிய செயலா் சூா்யா, அணைக்கட்டு மலை ஒன்றிய செயலா் சிவராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முன்பு கட்சியின் ஒன்றியச் செயலா் ஆனந்தன் (குடியாத்தம்), பன்னீா்செல்வம்(போ்ணாம்பட்டு) ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது. மாவட்டத்தில் இந்த இரு இடங்களில் நடைபெற்ற இந்த மறியல்களில் 40 பெண்கள் உள்பட மொத்தம் 154 போ் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT