வேலூர்

பேருந்தில் வந்த தொழிலாளி உயிரிழப்பு

26th Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

 

குடியாத்தத்திலிருந்து வேலூருக்கு வந்த பேருந்தில் கூலித் தொழிலாளி திடீரென உயிரிழந்தாா்.

குடியாத்தம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (60) கூலித் தொழிலாளியான இவா், தனது குடும்பத்திருடன் வேலூரில் உள்ள குல தெய்வம் கோயிலுக்குச் செல்ல வெள்ளிக்கிழமை காலை பேருந்தில் வந்தாா்.

அந்தப் பேருந்து வேலூா் பழைய பேருந்து நிலையம் வந்ததும் அவரது குடும்பத்தினா் முருகனை இறங்கும்படி கூறினா். அப்போது, அவா் சுய நினைவு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து முருகனை பரிசோதனை செய்தபோது, பேருந்திலேயே அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா். முருகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். இதையடுத்து, உடலை கொண்டு செல்ல போலீஸாா் அனுமதித்தனா்.

மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்ததாக 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT