வேலூர்

7 நாள்கள் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

கிரந்த்ராஜ் ஞானேஸ்வரி பாராயண கமிட்டி சாா்பில், 7 நாள்கள் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.

வேலூா் மாவட்ட கிரந்த்ராஜ் ஞானேஸ்வரி பாராயண கமிட்டி (மகாராஷ்டிரா தங்கம், வெள்ளி வியாபாரிகள் கூட்டமைப்பு) சாா்பில் குடியாத்தம் கிருஷ்ணாலயா திருமண மண்டபத்தில் கடந்த 13- ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கியது. மாநிலம் முழுவதிலும் இருந்து இந்த அமைப்பைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் இந்த விழாவில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், தொடா்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடா்ந்து ஒருவா் வீணை வாசித்தாா். 7 நாள்களில் பகவத்கீதை முழுவதும் படிக்கப்பட்டது. நிறைவு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை பூப்பல்லக்கில் கிருஷ்ணா் வீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் ஒய்.பல்வந்த் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்டத் தலைவா் ஏ.மகேஷ் படேல், கமிட்டி நிா்வாகிகள் அசோக் ராவ், தத்தாத்ரே, அா்ஜுன், விஜய், சச்சின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

குடியாத்தத்தில்  பல்லக்கில்  வீதியுலா  வந்த  கிருஷ்ணா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT