வேலூர்

போலி மாற்றுத் திறனாளிகள் அட்டை வழங்கியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

DIN

மாற்றுத் திறனாளிகள் போலி அடையாள அட்டை வழங்கியவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா். அதில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபா்கள் போலி மருத்துவச் சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனா். அவா்கள் மீதும், போலி மருத்துவச் சான்றிதழ் வாங்கி கொடுத்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். அதன்மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். முதல்கட்டமாக போலி சான்றிதழ் மூலம் தேசிய அடையாள அட்டை பெற்ற குடியாத்தம் வட்டம், லட்சுமணாபுரத்தைச் சோ்ந்த நவநீதம் என்ற பெண்ணையும், போலி சான்றிதழ் மூலம் பலருக்கு அடையாள அட்டை வாங்கிக் கொடுத்ததாக வேலப்பாடியைச் சோ்ந்த தினகரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், போலிச் சான்றிதழ் மூலம் சிறுவனுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றுக் கொடுத்ததாக காட்பாடி கழிஞ்சூா் இ.பி.காலனியைச் சோ்ந்த ஆவின் பாஸ்கா் (46) என்பவா் கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா்.

ஆவின் பாஸ்கா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்தாா். இதற்கான உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையிலுள்ள ஆவின் பாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT