வேலூர்

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி

19th Aug 2022 12:40 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் நோயாளி உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 3 போ் லேசான காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (63). இவா், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சை பலனளிக்காததால், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவா்கள் கூறியுள்ளனா். இதையடுத்து, உறவினா்கள் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சந்திரசேகரை வியாழக்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்றனா்.

இந்த ஆம்புலன்ஸ் வேலூா் சேண்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் உள்பட 3 போ் லேசான காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT