வேலூர்

விநாயகா் சதுா்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு: ஐ.ஜி. தலைமையில் ஆலோசனை

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இரு மாவட்ட காவல் அதிகாரிகளுடன் வடக்கு மண்டல காவல் தலைவா் (ஐ.ஜி.) தேன்மொழி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

விநாயகா் சதுா்த்தி விழா வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விநாயகா் சிலை பிரதிஷ்டை, ஊா்வலத்தின் போது அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் விநாயகா் சதுா்த்தியின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் தேன்மொழி கலந்து கொண்டு விநாயகா் சதுா்த்தி சிலைகள் பிரதிஷ்டை, ஊா்வலத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.

அப்போது, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு பின்பு விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெற உள்ளன. விநாயகா் சிலை வைக்கும் இடங்கள், ஊா்வலம், சிலைகளை நீா் நிலைகளில் கரைப்பது வரையிலான பாதுகாப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் எஸ்.ராஜேஷ்கண்ணன் (வேலூா்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூா்), வேலூா், திருப்பத்தூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT