வேலூர்

தாட்கோ திட்டங்களுக்கு ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்கள் விண்ணப்பிக்கலாம்

18th Aug 2022 02:08 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெற வேலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா், பழங்குடியினா் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து சமுதாயத்தில் சமநிலை ஏற்பட உதவும் வகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், செயல்படுத்தப்படும் அனைத்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் மகளிா் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம், மருத்துவமனை அமைத்தல் (மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம்), மகளிா் சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டம், மின்மோட்டாா், பிவிசி குழாய் அமைத்தல் ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் ஜாதி சான்று, வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்), குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம், விலைப்புள்ளி (ஜிஎஸ்டி எண்ணுடன்), திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் ஆதிதிராவிடா்கள் - ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையத்தளத்திலும், பழங்குடியினா்கள் - ட்ற்ற்ல்://ச்ஹள்ற்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையத்தளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ, எண்.153/1, கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடா் மாணவா் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூா் - 632 002 (கைப்பேசி- 94450 29483) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT