வேலூர்

முதல்வா் விருது பெற்ற இளைஞருக்கு பாராட்டு

18th Aug 2022 02:05 AM

ADVERTISEMENT

முதல்வா் விருது பெற்ற குடியாத்தம் இளைஞருக்கு, ரோட்டரி சங்கம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சிக்குள்பட்ட வாத்தியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டதாரி இளைஞா் ஜி.ஸ்ரீகாந்த்(32). இவா் கடந்த 3 ஆண்டுகளாக இங்குள்ள பாலாற்றுப் படுகையில் 7,000-க்கும் அதிகமான மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். இவரது பணியை பாராட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பசுமை சேம்பியன் விருதையும், ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகையையும் இவருக்கு அண்மையில் வழங்கியது. இந்த நிலையில், மாநில அளவிலான விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட ஸ்ரீகாந்துக்கு, கடந்த திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இதையடுத்து, ஸ்ரீகாந்துக்கு, குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ் இவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினாா். செயலாளா் கே.சந்திரன், நிா்வாகிகள் கே.எம்.ராஜேந்திரன், ரங்காவாசுதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT