வேலூர்

மீன் வளா்ப்பில் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

17th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

மீன் வளா்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், மானியம் பெற்றிட வேலூா் மாவட்டத்திலுள்ள மீன் வளா்ப்பவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில், பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பை ஊக்குவிக்க உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. வேலூா் மாவட்டத்தில் மீன் வளப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆா்வமுள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ், விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

250 முதல் 1,000 சதுர மீட்டா் அளவுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளா்ப்பினை மேற்கொள்ள மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருள்கள், பறவை தடுப்பு வசதிகள் ஆகிய உள்ளீட்டு பொருள்களுக்கான மொத்த மதிப்பு ரூ. 36,000-த்தில் 50 சதவீதம், அதாவது ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ. 18,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயி சான்றிதழ், பண்ணைக் குட்டை அமைந்துள்ள நிலம் தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருக்க வேண்டும். தற்போது உறுப்பினராக இல்லையெனில், பயனாளி உறுப்பினராகப் பதிவு செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பங்கள் அதிகளவில் பெறப்பட்டால் பயனாளா்கள் முன்னுரிமை, தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்புவோா் உடனடியாக மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், வேலூா் அலுவலகத்தை நேரிலோ, 93848 24485 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா் அலுவலகம், மீன்வளம், மீனவா் நலத் துறை, எண். 16, 5-ஆவது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகா், காட்பாடி, வேலூா்- 600 007, (தொலைபேசி எண். 0416- 2240329, 93848 24248, மின்னஞ்சல் - ஹக்ச்ண்ச்ஸ்ங்ப்ப்ா்ழ்ங்1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்)

என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT