வேலூர்

பொய்கை சந்தையில் களைகட்டிய கால்நடை வா்த்தகம்

17th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

கடந்த சில வாரங்களுக்குப் பிறகு பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் களைகட்டியது. இதன் மூலம், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள், காளைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

தவிர, ஆடுகள், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இதேபோல், கால்நடைகளை வாங்க வியாபாரிகளும், கால்நடை வளா்ப்பவா்களும் அதிக அளவில் சந்தையில் குவிந்திருந்தனா். இதனால், சில வாரங்களுக்குப் பிறகு பொய்கை சந்தையில் கால்நடைகளின் வியாபாரம் களைகட்டியது.

ADVERTISEMENT

கறவை மாடுகள் ரூ. 60,000 முதல் ரூ. 80,000 வரை விலை போயின. வண்டி மாடுகள், இளம் கன்றுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் அதிகளவில் விற்பனையாயின. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தை மூலம் ரூ. ஒரு கோடிக்கு மேல் வா்த்தகம் நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இனிவரும் வாரங்களில் கால்நடைகள் வா்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT