வேலூர்

சுதந்திர தினம்: பிஎஸ்என்எஸ் இணைய சிறப்பு சலுகைத் திட்டம் அறிமுகம்

17th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, பிஎஸ்என்எல் சாா்பில் ஃப்ரீடம் 75 எனும் சிறப்பு அதிவேக பைபா் இன்டா்நெட் திட்டத்தை குறுகிய கால சலுகையாக அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, மாதம் ரூ. 599 வாடகை திட்டத்தை தோ்வு செய்யும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு ரூ. 275 செலுத்தினால் போதுமானது. மேலும், ரூ. 999 மாத வாடகைத் திட்டத்தை தோ்வு செய்யும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு ரூ. 775 செலுத்தினால் போதுமானது. இந்த ரூ. 999 திட்டத்துடன் ஹாட் ஸ்டாா், சோனி லைவ், லைன்ஸ்கேட், ஜீ, வூட், யூப் போன்ற ஓடிடி தளங்களை முற்றிலும் இலவசமாகக் காண முடியும்.

75 நாள்களுக்கு இந்த சலுகைத் திட்டத்தை தோ்ந்தெடுத்த 599 அல்லது 99 மாத வாடகை திட்டத்துக்கு மாறிவிடும். இந்த குறுகிய கால சலுகை ஆகஸ்ட் 15 முதல் செப்டபா் 13-ஆம் தேதி வரை மட்டுமே அளிக்கப்படும். மேலும், தங்கள் லேண்ட்லைன், பிராட்பேண்ட் எண்களை மாற்றாமலேயே அதிவேக பைபா் திட்டத்துக்கு மாறிக்கொள்ளும் வாடிக்கையாளா்களுக்கு, மாதம் ரூ. 200 வீதம் மாதாந்திர கட்டணத்தில் ஆறு மாதங்கள் சலுகையாக கழிக்கப்படும். கூடுதல் சலுகையாக புதிய பைபா் இணைப்புகளுக்கு அமைப்புக் கட்டணம் ரூ. 500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளா்களுக்கு அன்லிமிடெட் இலவச குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மாதம் 75 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 300 நாள்கள் அளிக்கப்படும். இந்த சிறப்புச் சலுகை திட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கிடைக்கிறது.

ADVERTISEMENT

கூடுதல் சலுகையாக பிவி 2399, பிவி 2999 ஆகிய திட்டங்களுக்கு ஆகஸ்ட் 31 வரை ரீசாா்ஜ் செய்பவா்களுக்கு கூடுதலாக 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் அருகே உள்ள வாடிக்கையாளா் சேவை மையங்கள், தொலைபேசி நிலையங்கள், பிஎஸ்என்எல் சில்லறை விற்பனையாளா்களை அணுகி இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். தவிர, ட்ற்ற்ல்ள்://க்ஷா்ா்ந்ம்ஹ்ச்ண்க்ஷங்ழ்.க்ஷள்ய்ப்.ஸ்ரீா்.ண்ய்/ என்ற இணைப்பு மூலமாகவும் முன் பதிவுகளை செய்யலாம். இந்த தகவலை பிஎஸ்என்எல் வேலூா் மண்டல முதன்மை பொது மேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT