வேலூர்

நீா்நிலைகளைத் தூா்வார கிராம சபையில் தீா்மானம்

DIN

நீா்நிலைகளை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் பங்கேற்றுப் பேசினாா்.

அவா் பேசுகையில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சியில் உள்ள ஈச்சமரக் குட்டை உள்ளிட்ட 3 குட்டைகளை தூா்வாரி சீரமைக்க வேண்டும். முன்னதாக கிராமத்தில் உள்ள நீா்நிலைகளை, அளவீடு செய்து, அதன் பின்னா் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும். இங்குள்ள வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் தகுதியானவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, மயானத்துக்குச் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும். குடியாத்தம்- கொட்டாரமடுக்கு இடையே நகரப் பேருந்தை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

எம்எல்ஏ அமலுவிஜயன், கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்டசியா் எஸ்.விஜயகுமாா்,வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.காா்த்திகேயன், ஊராட்சித் தலைா் டி.பி.திமேஷ்(எ) துளசிராமுடு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.உத்ரகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் வி.பிரகாசம், முன்னாள் தலைவா் ஆா்.சிட்டி(எ)பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT