வேலூர்

மது விற்பனை செய்தவா் கைது

15th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே கடையில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக, தகவலின் பேரில் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், துணை வட்டாட்சியா் சுபிசந்தா் ஆகியோா் சந்தப்பேட்டையில் உள்ள ஒரு கடையைச் சோதனையிட்டனா்.

அந்தக் கடையில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்து 146 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடா்பாக பாலு (50) என்பவரை நகர போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT