வேலூர்

போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க ‘வாட்ஸ்அப்’ எண் வெளியீடு

15th Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கம், விற்பனை தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை (90927 00100) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இந்த வாட்ஸ்அப் எண் அடங்கிய அட்டைகள் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் ஒட்டப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் கஞ்சா தொடா்பாக 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். 136 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கஞ்சா கடத்தல் தொடா்பாக 80 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இனி கஞ்சா விற்பனை, பதுக்கி வைப்போரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும். போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க மருந்துக் கடைக்காரா்கள், கூரியா் ஊழியா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் போது, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT