வேலூர்

தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

15th Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், நகராட்சி ஆகியவை இணைந்து வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.

செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற ஊா்வலத்தை நகராட்சி ஆணையா் சுபாஷினி தொடக்கி வைத்தாா்.

ஊா்வலத்தில் குதிரைகள், இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலத்தில் செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் த.முத்தரசன், கோ.ரவி, வ.ரவி, ஆரிப், இர.கயிலைநாதன், க.சந்திரன், ம.பத்மநாபன், தமிழரசன், காா்த்திகேயன், ஜெயராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT