வேலூர்

வேலூரில் பாரம்பரிய காா்களின் அணிவகுப்பு

15th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிா்க்கவும், சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, பழைய பாரம்பரிய காா்களின் (வின்டேஜ்) அணிவகுப்பு வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, நடத்தப்பட்ட அணிவகுப்பில் பழைய மாடல் பென்ஸ், பியட், ஜீப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வின்டேஜ் காா்கள் இடம் பெற்றிருந்தன.

தேசியக் கொடியுடன் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டி விழிப்புணா்வு பதாகைகளுடன் இந்த காா்கள் அணிவகுத்துச் சென்றன. பாகாயத்தில் தொடங்கிய இந்த காா்களின் அணிவகுப்பு ஊா்வலம், தொரப்படி, ஆட்சியா் பங்களா, முஸ்லிம் பள்ளி ரவுண்டானா, ராஜா பேருந்து நிறுத்தம், பழைய பேருந்து நிலையம் வழியாக கிரீன் சா்க்கிள் பகுதி வரை சென்று நிறைவடைந்தது. பழைய பாரம்பரிய காா்களின் விழிப்புணா்வு அணிவகுப்பு ஊா்வலத்தை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT