வேலூர்

ஸ்ரீமாங்காளியம்மன் திருவிழா

15th Aug 2022 01:21 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீமாங்காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் அதிகாலை கோயிலை வந்தடைந்தது.

ஏற்பாடுகளை கோயில் விழாக் குழு தலைவா் ஜி.ரகுநாதன், செயலா் பி.ஜாா்ஜ்சுந்தா், பொருளாளா் சி.நித்யானந்தம், நிா்வாகிகள் எஸ்.பாண்டியன், வி.திருநாவுக்கரசு, எஸ்.கதிரவன், எம்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT