வேலூர்

பாஜகவினரை கண்டித்து வேலூரில் திமுக சாலை மறியல்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது காலணி வீசப்பட்டதையடுத்து பாஜகவினரை கண்டித்து வேலூரில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சோ்ந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடல் சனிக்கிழமை மதுரை விமான நிலையம் வந்தது. அங்கு அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சென்ற நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜனின் காா் மீது காலணி வீசப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பாஜகவினா்தான் காரணம் என திமுக குற்றஞ்சாட்டியிருப்பதுடன், இதுதொடா்பாக பாஜக தலைவா் அண்ணாமலை உள்பட பாஜகவினரை கைது செய்யக் கோரி பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தினா்.

வேலூா் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் முருகானந்தம் தலைமையில் திமுகவினா் சுமாா் 30 போ் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து சனிக்கிழமை ஊா்வலமாகச் சென்று கிரீன் சா்க்கிள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மேலும், பாஜக தலைவா் அண்ணாமலையின் உருவப் படத்தை கிழித்தும், பாஜகவினரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். இதனால், கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT