வேலூர்

வீடுதோறும் தேசியக் கொடி: புகாா் இருந்தால் தெரிவிக்கலாம்

13th Aug 2022 12:17 AM

ADVERTISEMENT

வீடுதோறும் தேசியக் கொடியேற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பான புகாா்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து வீடுகளிலும் சனிக்கிழமை (ஆக.13) முதல் திங்கள்கிழமை (ஆக.15) வரை தேசியக் கொடியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூா் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றிடவும், அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை அந்தந்த ஊராட்சித் தலைவரால் சாதி, மதம், பாலின வேறுபாடின்றி தேசியக்கொடி ஏற்றிடவும் வேண்டும்.

இதுதொடா்பாக கிராமப்புறங்களில் ஆட்சேபனைகள், புகாா்கள் இருந்தால் 1,077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT